உத்தமபாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவ மாணவியர்களால் நடத்தப்பட்டது.!

13.10.25





தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிகளில் தொடர்ந்து போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வந்த நிலையில் தொடர் கொலைகளும் அரங்கேறியது இதனை அடுத்து பல்வேறு அமைப்பினர் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.


 இன்று புனித விண்ணரசி தேவாலயத்தில் துவங்கிய போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் உத்தமபாளையம் அம்பேத்கர் திடல் ஆர். சி தெற்கு தெரு,
 மேல கிணற்றுத் தெரு, வடக்குத்தெரு, ஆர்சி பழைய கோவில் தெரு, கோம்பை செல்லும் கல்லூரி சாலை வழியாக புனித ஜோசப் ஆர்சி உயர்நிலைப் பள்ளியில் பேரணியானது நிறைவு பெற்றது.

 பேரணியில் கஞ்சா, மது போதை, போதை மாத்திரை, போதை ஊசிகள், உள்ளிட்டவற்றை ஒழிப்பது குறித்து கோஷங்கள் எழுப்பினர். போதைக்கு அடிமையாகி உனது திறமையை நீ இழக்காதே என மாணவ மாணவியர் மற்றும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கோசங்கள் எழுப்பியவாறு  சென்றனர். 

இந்த நிகழ்வில் நூற்றாண்டு பழமையான புனித பெரியநாயகி நடுநிலைப்பள்ளி புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி விடுதலை ஜோசப் துவக்கப் பள்ளியின் தாளாளர் அந்தோணி ராஜ் பேரணியினை கொடியை சேர்த்து துவக்கி வைத்தார் பள்ளிகளின் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்....
Previous Post Next Post