தேனி அருகே முறையாக சர்வே செய்யாமல் உரிய இழப்பீடு வழங்காமல் உயர் மின்னழுத்த கோபுர வேலைகள் செய்ய விவசாய நில உரிமையாளர்கள் எதிர்ப்பு.!
தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி அருகே கோவிந்த நகரம் அமைந்துள்ளது இப்பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க அரசு நிலங்களை கையகப்படுத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கோவிந்த நகரம் பகுதியில் கோபுர வேலைகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை இழப்பீடு உரிய அளவில் கிடைக்கவில்லை மேலும் நில அளவை முறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்திய நில உரிமையாளர்கள் மீண்டும் சர்வே செய்து முறையாக அளந்து நிலத்திற்கு உரிய இழப்பிடையும் வழங்கிவிட்டு பின்னர் உயர் மின்னழுத்த கோபுர வேலைகளை செய்யுங்கள் என முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் உயர் மின் அழுத்த கோபுர தொழிலாளர்கள் பணி செய்ய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி காவல்துறை உதவியுடன் பணி செய்ய வந்தார்கள் இருப்பினும் விவசாய நிலங்களில் உரிமையாளர்கள் நாங்களும் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம் ஆகவே முறையாக நிலத்தை சர்வே செய்து எங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிவிட்டு பின்னர் பணிகளை தொடரலாம் எனக் கூறினார்கள் காவல்துறையும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது.
தோட்டங்களுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் கொண்டு செல்ல உரிய இழப்பீட்டை வழங்கிவிட்டு உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில் தங்களது தோட்டங்களுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை ஆனால் அதற்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், முறையாக அளவீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
பேட்டி: சீனிவாசன் வழக்கறிஞர்.(விவசாயிகள்)