உத்தமபாளையம் கோம்பையில் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.!



உத்தமபாளையம் கோம்பையில் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.!
இவர்களுக்கு பதினைந்து நாட்களாக தண்ணீர் வராத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.!!
 
அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் வசிக்கும் விதமாக மக்களுக்கு ஒதுக்கியது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் சூழலில் கடந்த 15 நாட்களாக குடிதண்ணீர் வராததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி மன உளைச்சல் ஏற்பட்டு சாலை மறியலில்ஈடுபட்டனர்.  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
உத்தமபாளையம் போடி மாநில நெடுஞ்சாலையில்  பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.

தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் வட்டாட்சியர்  கண்ணன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிதிற்கான ஏற்பாடு செய்யப்படும் என வட்டாட்சியர் கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

உடனடியாக கோம்பை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரவும் பழுதடைந்த மோட்டாரை சரி செய்து தரவும் புதிதாக போர்வெல் அமைத்து தர வேண்டியும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் பொது மக்கள் கோரிக்கை விடத்துள்ளனர்.....
Previous Post Next Post