நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கிட மத்திய அரசு நிதி உதவி அளிக்க கோரிக்கை -
மத்திய குழு தலைவர் ஏற்பு
பிஆர்.பாண்டியன்...
காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும்
பி ஆர் பாண்டியன் கோரிக்கை மனு அளித்து குழு தலைவரிடம் எடுத்துரைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இரு பருவமழைகளை பெறக்கூடிய மாநிலமாக இருக்கிறது நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15வரை தீவிரமாகப் பெய்தது. அக்டோபர் 17முதல் வட கிழக்கு பருவமளையும் பெய்து வருகிறது. இதனால் காரீப்,ரபி பருவ கொள்முதல் கொள்கை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது.தனி கொள்முதல் கொள்கையை தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும்.
காய்ந்த நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து உள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் ஈரப்பதம் அளவு கூடிக் கொண்டே இருக்கும். எனவே 22 சதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடன் அனுமதி வழங்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் தென்னிந்திய உணவுத்துறை அதிகாரிகள் மாநாட்டை மத்திய அரசு ஹைதராபாத் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்துகிறது.
அம் மாநாட்டிலேயே தமிழ்நாட்டிற்கான கொள்முதல் குறித்து தனி கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.மத்திய அரசு பங்களிப்புடன் ஈரப்பத சதத்தை உயர்த்தி கொள்முதல் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இந்திய மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.மத்திய அரசின் முகர்வாக தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது.எனவே நெல் உற்பத்தி இழப்பிற்கும், கொள்முதலுக்கும் மத்திய அரசு முழு பொருப்பேற்க வேண்டும். மாநில அரசிடம் நிதிபற்றாக்குறை உள்ளது.எனவே கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.
குறிப்பாக. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களுக்கும்நெல் உலர்த்தும் இயந்திரங்கள் உடனடியாக வழங்கிட மத்திய அரசு நிதி உதவி அளித்திட வேண்டும் என எடுத்துரைத்தோம். இதனை ஏற்றுக் கொண்ட குழுத்தலைவர் அருகிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரிடம் நெல் உலர்த்து இயந்திரம் வழங்க மத்திய அரசிற்கு முன் மொழிவுக்கான கோப்புகளை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஆய்வகம் தமிழகத்தில் காவிரி டெல்டாவில் விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
மாநில கவுரவத் தலைவர் நீலன் அசோகன் துணைத்தலைவர் எம் கிருஷ்ண மணி திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் ஒன்றிய செயலாளர் ஆனந்த் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி நீடாமங்கலம் நகர தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.
இவன்.
என்.மணிமாறன்,
செய்தி தொடர்பாளர்.