தனியார் பள்ளி முதல்வர் பிரேம்குமார் அவர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருது அமைச்சர் வழங்கினார்

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்துள்ள கொட்டாவூரில் உள்ள  அசோக் மெஷின் தனியார் மேல்நிலை பள்ளியின் முதல்வர் சுமார் 20 ஆண்டுகளாக பெரும் பாடுபட்டு அயராது உழைத்த ஆசிரியர் பிரேம்குமார் அவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளான இராதாகிருஷ்ணன் விருதை நமது பள்ளியின் முதல்வர் பிரேம்குமார் அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் சிறந்த ஆசிரியருக்கான இராதாகிருஷ்ணன்விருது பெற்றுக்கொண்டார் இது நமது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் கொட்டாவூர் அசோக் மெஷின் பள்ளிக்கும் பெருமையை சேர்த்துள்ளார். விருது பெற்றதற்காக பள்ளியின் தாளாளர் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.





சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் 


Previous Post Next Post