வாகன ஓட்டிகளால் தொல்லை, பால் முகவர்கள் வேதனை கண்டுகொள்ளாத ஆவின் பால் அதிகாரிகள்

 


ராணிப்பேட்டை மாவட்ட ஆவின் பால் மூவர்கள் நல சங்கம் சார்பில் ராணிப்பேட்டை சந்தைமேடு அருகே உள்ள வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இவ் ஆலோசனை கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார், செயலாளர் சங்கர்  மாநிலத் துணைத் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர் மாதவன், ஆலோசகர் ஆற்காடு குமரவேல், சிப்காட்  மேகநாதன், ஆற்காடு வினோத், சிவகுமார், ராஜசேகர், ராணிப்பேட்டை விக்னேஷ், வேப்பூர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்




 ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு சங்க நிர்வாகிகள்   செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது

  பால் முகவர்களுக்கு பால் பாக்கெட் களை ஏற்றி வந்து விநியோகம் செய்யும் வாகன ஓட்டுகள் பல தொல்லைகள்   கொடுத்து வருகின்றனர் தினமும் சரியான நேரத்தில் வருவது கிடையாது கடைக்கு அருகாமையில் பால் இறக்காமால்  சுமார்   500 மீட்டர் தொலைவிலேயே நிற்கின்றனர் அங்கிருந்து கடைக்கு  பால் பாக்கெட்டுகளை   எடுத்துச் செல்வதற்கு சிரமமாக உள்ளது

 என்றனர் 


மேலும் கூடுதலாக பால்   பாக்கெட் பதிவு செய்தால் காலையில் கொடுக்க வேண்டியதை மாலையிலும், மாலையில் கொடுக்க வேண்டியதை மறுநாள் காலையிலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வாக்குவாதம் செய்து  ஒருமையில்  பேசி மிரட்டுகின்றனர் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் நாங்கள் இருக்கும் இடம் அது மாதிரி என்கிறார்கள்  


தற்போது 407 வாகனத்தில் தான் பால் பாக்கெட் இறக்குமதி செய்யப்படுகின்றன கூடுதலாக பால் பாக்கெட்டைகளை பதிவு செய்யும்போது அதனை ஏற்றி வருவதற்கு ஏற்ற வாகன வசதி இல்லை   கண்டெய்னர் வாகனங்கள் ஏற்பாடு செய்தால் மட்டுமே பால் வினியோகம் சீரான முறையில் நடைபெறும்


   பால் பாக்கெட்கள் பெரும்பாலும் ஓட்டை பாக்கெட்டுகளாகவே  இருக்கின்றன இதனால் பால் அளவு குறைந்து  நஷ்டம் ஏற்படுகிறது  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்  முழுமைக்கும்  வாகன ஒப்பந்ததாரர் தற்போது ஒரே தரப்பினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம்  மாறாக மாற்று நபர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்  இக்குறைகளை எல்லாம் துறை சார்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்  இதனை சரி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் காலதாமதமாகும் பட்சத்தில்  பால் கட்டணம் செலுத்துவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோமென தெரிவித்தனர்.


Previous Post Next Post