நாமக்கல் மாவட்டம் குமாரபாளையதில் அனைத்து வணிகர் சங்க சார்பாக துவக்கவிழா, கொடியேற்று விழா மற்றும் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையதில் அனைத்து வணிகர் சங்க சார்பாக துவக்கவிழா, கொடியேற்று விழா மற்றும் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. 

முன்னிலை விடியல் பிரகாஷ் செயலாளர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா  பங்கேற்று நகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் ஆனங்கூர் பிரிவு சாலையில் கொடி ஏற்றி  வைத்து ஊர்வலமாக ரெயின்போ மஹாலில்  சிறப்புரையாற்றினார் குமாரபாளையம் சங்கத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது கார்ப்பரேட் கம்பெனிக்கு உற்பத்தியாளர் விலை நிர்ணயம் செய்து கொடுத்து கொண்டுள்ளனர் சிங்கிள் விண்டோ கடைகள் ஒட்டுமொத்தமாக காலி செய்யும் ஆபத்து நெருங்கிக் கொண்டு உள்ளது உற்பத்தியாளர்கள் விலைவாசி சமநிலை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பு போராடத் துவங்கியுள்ளது

ஒவ்வொரு கார்ப்பரேட் கம்பெனியும் விலை குறைத்து விற்கிறோம் என்ற மாயை விலையை விரித்து மக்களை ஏமாற்றி கொண்டு உள்ளனர் அவர்கள் முகத்திரையை கிழித்து சாமானிய வணிகர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் திரும்பி வந்ததும் கோரிக்கை வைக்க உள்ளோம் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் வசம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி டெல்லியில் சிந்தித்து 21 கோடி பேர் சில்லரை வணிகர்கள் வாழ்வாதார காப்பாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை வைக்க உள்ளோம்
50% வரி உயர்வால் இங்கிருந்து அனுப்பப்படும் சரக்கு பாதி வழி நிறுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி விலை மதிப்புள்ள மீன்கள் திருப்பி அனுப்பப்படுகிறது ஈரோடு திருப்பூர் பகுதியை சார்ந்த ஜவுளி துறையை சேர்ந்தவர்கள் மிகவும் நலிய தொடங்கி உள்ளனர் அமெரிக்கா அதிபரின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்த அந்த நாட்டு நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது குமாரபாளையத்தில் சாயப்பட்டறை பிரச்சனை கடுமையாக உள்ளது இதற்கு தீர்வாக சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக அரசு அமைத்து சாயப்பட்டறை தொழிலை பாதுகாக்க வேண்டும் டி மார்ட் ஆன்லைன் வர்த்தகம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து போராட தொடங்கி உள்ளோம் டிமாட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்கப்படும் பொருட்கள் 50% தள்ளுபடி என அறிவித்துள்ளனர் இதற்கு காரணம் எங்கள் வணிகர் சங்க போராட்ட அறிவிப்பு தான் பாரதப் பிரதமர் உள்நாட்டு உற்பத்தி பெருக்க வேண்டும் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் உள்நாட்டு வழியில் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லுகிறார் உள்ளூர் வணிகர்களை பாதுகாக்க வேண்டும் நகரங்களில் பாதுகாக்க வேண்டும் மும்பை போன்ற நகரில் வாழும் டீமார்ட் போன்ற நிறுவன அதிபர்கள் விரிப்புகளால் இங்குள்ள 21 கோடி சில்லறை வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் ஜிஎஸ்டி வரி சலுகை தீபாவளி பரிசாக பாரத பிரதமர் கொடுத்துள்ளார்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு மேல் டெல்லி சென்று நிதியமைச்சரை சந்தித்து சட்ட விதிகளை எளிமைப்படுத்த கேட்டுள்ளோம் சட்ட விதிகளை வைத்து க்கொண்டு தீய அதிகாரிகள் சிலர் வியாபாரிகளிடம் பணம் எடுத்துக் கொண்டு உள்ளார்கள் மத்திய அரசின் வணிகர் நல வாரியம் பணிகள் கிடப்பில் உள்ளது அதனை நினைவுபடுத்த செயல்படுத்த பல அமைச்சர் வசம் கேட்டுக் கொண்டுள்ளோம் zomato போன்ற நிறுவனங்கள் போல உள்ளூர் அரசு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட வியாபாரம் செய்து வருகிறார்கள் உள்ளூர் அமைப்புகள் ஏற்படுத்தி உள்ளூர் வணிககள் பயன்பெறும் வகையில் செயல்படுதி வரவேற்கிறோம் வெளி மாநில நபர்கள் இங்கு வந்து நமது வணிகர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது நாங்கள் அனுமதிக்க முடியாது  என அவர் பேசினர்.
வணிகர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கடைகளுக்கு சான்றிதழ் வழங்கினார்

விழா முடிவில்  சேகர் நன்றி உரை கூறினார்.

மேலும் விழாவில் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், ஈரோடு மாவட்ட தலைவர் கா சண்முகவேல் ஈரோடு மாவட்டத் துணைத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Previous Post Next Post