ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்பி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் குமாரி கலைமணி தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு சந்திரகலா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.மேலும் இம்முகாமில் வேம்பி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, முதியோர்களுக்கு மருந்து பெட்டகம்,பல்வேறு துறை சார்ந்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.
இந்த முகாமில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றிய பெருந்தலைவர் அசோக்,வேம்பி ஊராட்சி மன்ற தலைவர் குமாரி கலைமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, துணைத் தலைவர் ஷோபனா ராஜ்குமார், திமிரி ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சாமந்தி, ராஜேந்திரன், வெங்கடேசன்,R.சுஜாதா, பாபு,D.சுஜாதா மற்றும் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.