பள்ளி மாணவர் மரணம்: மதிய உணவு சாப்பிட்ட பிறகு முகங்கள் வீங்கியதாக தகவல்


 ராணிப்பேட்டை மாவட்டம்
​திமிரி, தாமரைப்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த மணிகண்டன்-தீபா தம்பதியரின் மகன் மிதுன் (வயது 7), மதியம்  உணவை அருந்திய பிறகு முகம் வீங்கிய நிலையில் காணப்பட்டதால் தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


​கூலி வேலை செய்துவரும் மணிகண்டன்-தீபா தம்பதியரின் மகன் மிதுன், நேற்று வழக்கம் போல் திமிரி காவனூர் சாலை எஸ்பி பேட்டையிலுள்ள யோகி வேமான தனியார்  பள்ளிக்குச் சென்றுள்ளார். மதிய உணவு அருந்திய பிறகு, மிதுனின் முகம் வீங்கியவாறு இருந்ததைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்  பெற்றோர்கள் அவரை திமிரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
​ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மிதுன் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர  போலிஸ்சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதிய உணவில் ஏற்பட்ட ஏதேனும் ஒவ்வாமையால் இச்சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த முழுமையான விவரம் விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்.
Previous Post Next Post