ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் மாவட்டத் தலைவர் பங்கேற்று கண்டனம்


ஆற்காடு, செப். 23: 
இந்திய தேர்தல்ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் கையெழுத்து இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் நடைபெறற்றது. நகரத் தலைவர் எஸ்.பியாரே ஜான் தலைமை தாங்கினார் இந்த இயக்கத்தில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துகள் பெறப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.வீரப்பா அனைவரையும் வரவேற்றார். 
மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.உமா மகேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஆனந்தன், மற்றும் மாவட்டச் செயலாளர் ஏ.தீபன் நிர்மல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதி கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.கேசவன் மற்றும் எம்.பி.டி.அசேன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் மாவட்ட செய்திதொடர்பாளர் வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை முதல் கையெழுத்தைப் பதிவு செய்தார்.

மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் பிஜேபினரின்  வாக்குத் திருட்டு குறித்து விளக்கவுரையாற்றுகிறார்  மாவட்ட பொதுச் செயலாளர் என்.நந்தகுமார் மற்றும் மேச்சேரி பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர்.
இந்த நிகழ்வில், மேல்விஷாரம் நகரத் தலைவர் எம்.அப்துல் சுக்கூர், திமிரி கிழக்கு வட்டாரத் தலைவர் எஸ்.டி.ராமதாஸ், திமிரி மத்திய வட்டார தலைவர் எம்.லீலா கிருஷ்ணன், திமிரி மேற்கு வட்டாரத் தலைவர் காவனூர் கே.வி.சீனிவாசன், கலவை நகரத் தலைவர் எஸ்.விநாயகம், திமிரி நகரத் தலைவர் கோபி, மற்றும் விளாபாக்கம் நகரத் தலைவர் வி.பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமத், ஆற்காடு நகர தலைவர் முஜீப், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எல்.ஷர்மிளா, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.அருண், மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாவட்டத் தலைவர் ஏ.மொய்தீன் ஆகியோர்  நிர்வாகிகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் அனைத்து சார்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Previous Post Next Post