சொந்த வீடும் இல்லை, வாழ வசதியும் இல்லை காட்டுநாயக்கன் பொதுமக்கள் வேதனை



 நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் 

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த சிறு வளையம் கிராமத்தில் காட்டுநாயக்கன்  வகுப்பைச் சேர்ந்த  30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்   இம்மக்கள் நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் 
   நாங்கள்  காலாகாலமாக சிறுவளையம் கிராமத்தில் ஏறி புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம்   எங்களுக்கு இதுவரையில் ரேஷன் கார்டு, ஏரி வேலை அட்டை, சாதி சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை  போன்ற அரசு  சலுகைகள் எதுவுமே வழங்கப்படவில்லை
மேலும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டித்தர பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம்  மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 

  அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறார்கள் நாங்கள் நிற்கதியாக நிற்கிறோம் என்றனர்   மேலும் அவர்கள் பேசும்போது   மாவட்ட ஆட்சியர் எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு இலவச வீட்டு மனை  பட்டா வழங்கி,  வீடு கட்டித் தரவும் மற்ற அரசு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.
Previous Post Next Post