கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்.!
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தவுள்ளதாக கம்பம் வடக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் சார்பாய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஏலரசு களம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் சாக்கு பையுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்குபையில் 2கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் நின்றவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மதுரை அஸ்தினம்பட்டி சேர்ந்த சசிகுமார் (28) என்பதும், கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சசிக்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.....