நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாமிற்கு தலைமை தனபால் சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வர், முன்னிலை விடியல் பிரகாஷ் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர், முகாமை வேல்முருகன் சட்டப்பணி ஆணைக்குழு தன்னார்வலர் தொடங்கி வைத்தார்,
அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் குழு பரிசோதனை செய்தார்,
முகாமில் 112 பேர் பங்கு பெற்றனர் இதில் 14 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேலும் 11 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு கண்ணில் புரை, உண்டாகுதல் மாறுகண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, மற்றும் தூரப்பார்வை இலவசமாக பார்க்கப்பட்டது,
முகாமில் மற்றும் சண்முக சுந்தரம், நாகராஜ், மாதேஸ்வரன், மாதுகுமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.