வேலம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது

வேலம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது  பிறந்தநாள் விழா ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம்  சார்பாக வேலம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அண்ணாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது  சிறப்பு அழைப்பாளராக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் 
கே.பி.எம்.சதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், நாகரசம்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, ஒன்றிய அவைத் தலைவர் வடிவேலன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மணிகண்டன், கார்த்தி, வழக்கறிஞர் பிரிவு மோகன், ராஜா அண்ணாமலை, மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
 இதில் 300-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post