வருசநாடு அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை கொடூரமாக தாக்கிய கரடி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!



 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன்  விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் தர்மராஜபுரம் கிராமத்தில் பஞ்சம் தாங்கி மலையடிவாரத்தில் உள்ளது. தினமும் இவர் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது தோட்டத்திற்கு முருகன் சென்றார்.அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென முருகன் மீது பாய்ந்து தாக்க தொடங்கியது.
 முருகனின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கரடியை விரட்டி முருகனை மீட்டனர். கரடி தாக்கியதில் முருகனின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் கடமலைக்குண்டு போலீசாரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வனவிலங்குகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மலை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Previous Post Next Post