திண்டிவனம் ஆகஸ்ட்:30 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் கடலில் கரைக்கும் வகையில் விஜர்சனம் ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் உட்கோட்டத்தில் 322 சிலைகள் போலீசாரிடம் முன் அனுமதி பெற்று கடந்த 27ஆம் தேதி பெரு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் மரக்காணம் அருகே கைப்பாணி குப்பம் கடற்பகுதியில் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியாக விஜர்சனம் ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் செஞ்சி ரோடு அங்காளம்மன் கோயில் அருகில் இருந்து சிறப்பு பூஜை, தாரை தப்பாட்டத்துடன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளுடன் வாகனங்களோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விநாயகர் சதுர்த்தி விழா குழு தலைவர் கே.பிரபு தலைமையில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி புதுவை மாநில செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் சிறப்பு அழைப்பாளராக கே.ஆர்.
எஸ்.பில்டர்ஸ் குழுமம் தொழிலதிபர் சுப்பிராயுலு ,செஞ்சி வி.பி.என் குழுமம் தலைவர் தொழிலதிபர் வி.பி.என் கோபிநாத் கலந்து கொண்டு கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.
விநாயகம், பாட்டாளி மக்கள் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ்,
ஆசிரியர் ஏழுமலை, செந்தில்குமார், ஊடகவியாளர் துரைசோழன், விழா பகுதி பொறுப்பாளர் வி.பி.எஸ். மணிபாலன், ஐயப்பன், நகர தலைவர் வெங்கடேச பெருமாள், பாமக நகரத் தலைவர் சௌந்தர்,
ராதிகா, டி.என்.கே. பிரபு,கலை நிதியா, பிரபாகரன், பாபு ராஜாராம், வெல்டிங் பாலாஜி, இளைஞர் அணி மாநில செயலாளர் தினேஷ் குமார், முன்னாள் பொதுச் செயலாளர் எத்திராஜ். சந்திரன்.
வழக்கறிஞர் ரஜினிகாந்த், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திண்டிவனம் தாலுகா அலுவலகம் சந்திப்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீரை வழங்கினர்.