திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், திருச்சி மாநகர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன் அவர்களின் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விஜய் பட்டேல் மற்றும் சுதர்சினி, அஸ்லாம், ஹரிஹரன், ஹக்கீம், யோகானந்த், ஸ்டேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் எடுத்த தீர்மானங்கள்
1.பாஜக வின் ஒத்துழைப்போடு வாக்கு திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை மக்கள் மத்தியில் தெரியபடுத்தப்படும்.
2. உயகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலக்கமால் தடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
3. சுங்க சாவடிகளில் வசூல் செய்யக்கூடிய தொகையினை முறைப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளபடும்.
4. பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிபிற்கான ஆலோசனை வழங்க வேண்டும்.