ஆகஸ்ட் :-29
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாலாஜாவில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது மூன்றாம் நாளான நேற்று வாலாஜா அரசு குடியிருப்பு பகுதியில் இருந்து இந்து மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் வாகனத்தில் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சியுடன் சண்டி மேளம் இசையோடு வான வேடிக்கையுடன் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது
இந்நிகழ்விற்கு வேலூர் கோட்டத் தலைவர் எஸ் கே.மோகன் தலைமை தாங்கினார் மாவட்ட கௌரவத் தலைவர் செல்வராஜ், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர்,சம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்
இவ்ஊர்வலம் வாலாஜாவின் முக்கிய பஜார் வீதி வழியாக சென்று வீசி மோட்டூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் விநாயகர் சிலைகள் ஏரியில் இறக்கி கரைத்தனர் இதில் பாஜக மாநில நிர்வாகி முரளிநரசிம்மன்,பிரபு சாமிகள், மணி சாமிகள், ராகாட்ச்சியம்மன் காயத்திரி, வாலாஜா எம் ஏ.ஆன்மீக சொற்பொழிவாளர் பலராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.