திண்டிவனம் அன்னை தெரேசா ஆட்டோ ஸ்டாண்டில் விநாயகர் சதுர்த்தி விழா.
டிஎஸ்பி பிரகாஷ் பங்கேற்ப்பு.
திண்டிவனத்தில் அன்னை தெரேசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று நகர அன்னை தெரசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல் நேற்று 25ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆட்டோ ஸ்டாண்டில் சங்கத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில், ஏழு அடி உயர விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் சட்ட ஆலோசகர் அருண் என்கின்ற ஆறுமுகம், சங்க நிர்வாகிகள் நிமலநாதன், செந்தில்குமார், பார்த்திபன், மோகன், மூங்கிலான் என்கின்ற அப்பு, முரளி, பரசுராமன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த டிஎஸ்பி பிரகாஷ் உதவி ஆய்வாளர் செல்வதுரை மற்றும் காவல்துறையை சேர்ந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.