சகாதேவன் கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலை கரைப்பு.
செப். 01
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ஊர் கவுண்டர் நாகராஜ் தலைமையில் சிலை கரைப்பு
நாடு முழுவதும் கடந்த 27ம்தேதி விநாயகார் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேபோல் போச்சம்பள்ளி அருகே உள்ள வேடிக்கொட்டாய் கிராமத்தில் 10 அடியில் வெற்றி விநாயகர் சிலை வைத்து கடந்த ஐந்து நாட்களாக காலை, மாலை என இரு வேலைகளும் கொல்லுகட்டை, பழங்கள், பொரி கடலை வைத்து பூஜை செய்து பொது மக்கள் வழிபட்டனர். இன்று பூஜிக்கபட்ட விநாயர் சிலையை மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஊர் பொதுமக்கள் எடுத்து சென்று அகரம் தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். இதை தொடர்ந்து ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் அகரம் ,அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் 100க்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கபட்டது.