சென்னையில் செம்பொழில் அமைப்பின் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய கால்நடை,ஐவகை நிலங்கள்,அதனை உள்ளடக்கிய பாரம்பரிய இசைக்கருவிகள் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெறுகிறது.மிகப்பெரும் பொருட்செலவிலும் உழைப்பிலும் கண்காட்சி நடைபெறுவது சிறப்புக்குரியது. பாரம்பரிய வாழ்வியல் மற்றும் ஐவகை நிலம் சார்ந்த வாழ்வியல் முறைகளை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த வரலாற்று ஆவணங்களை காட்சிப்படுத்திய செம்பொழில் அமைப்பாளர் ஹிமாக்கரன் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.சென்னை மண்டல பொருளாளர் திருவள்ளூர் விஜய் பிரசாத், செய்தி தொடர்பாளர்
என் மணிமாறன்,மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பி.ஆர்.பாண்டியன்