ஆற்காடு ஆகஸ்ட்:- 19
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து எழுச்சி பயணம் செய்து வருகிறார் அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காட்டிற்கு வருகை தந்தார் அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது அவர் பேசியதாவது
திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது அண்ணா திமுக மக்களை நம்பி இருக்கிறது
அதிமுக வருகின்ற 2026 இல் ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனி மின்சாரம் வழங்கப்படும்
திமுக ஆட்சியில் வீட்டு வரி குழாய் வரி
குப்பை வரி எல்லாவற்றையும் உயர்த்திவிட்டு ஓட்டு போட்ட பொது மக்களுக்கு நல்ல பரிசு கொடுத்து விட்டார்கள்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எழுச்சி பயணம் சென்று வருகிறேன் அப்பொழுது தொழிலதிபர்கள் வணிகர்கள் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் என்னை சந்திக்கிறார்கள் அப்போது அவர்கள் சொல்லுகிற வார்த்தை எப்பொழுது திமுக ஆட்சி முடிவுக்கு வரும் அதிமுக ஆட்சி அமையும் என்று எதிர்பார்ப்போடு பேசுகிறார்கள்
எப்படியா ஆகிலும் ஆட்சிக்கு வாருங்கள் என்று சொல்லுகிறார்கள் நீங்கள் ஓட்டு போட்டா தானே ஆட்சிக்கு வர முடியும் நீங்கள் ஆதரித்தால் நிச்சயம் நாங்கள் ஜெயிப்போம் போன முறை வேற மாதிரி முடிவு பண்ணினோம் ஆனால் இந்த முறை நானும் சரி மக்களும் சரி ஒரே முடிவுதான் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் அதுதான் எங்களுடைய முடிவு எடப்பாடி பழனிசாமி பேருந்து எடுத்துக்கொண்டு ஊர் ஊராய் போய் பொய்யான தகவல்களை சொல்லி வருகிறார் என்று திமுகவினர் சொல்வார்கள் நான் வணிகர்கள் கொடுத்த உண்மையான விலைப்பட்டியலை சொல்லுகிறேன் சாப்பாடு அரிசி அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ 50 ரூபாய் திமுக ஆட்சியில் 77 ரூபாய் கடலை எண்ணெய் அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ 130 திமுக ஆட்சியில் ஒரு கிலோ 190 ரூபாய்
கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்டது ஏழை எளிய மக்கள் வீடு கட்ட முடியாது வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் அது கனவில் தான் கட்ட வேண்டும்
அவ்வளவு துன்பம் துயரம்
விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்த்தப்பட்டிருக்கிறது பொதுமக்கள் வாழ முடியுமா? வாழ முடியாது இதுபோன்ற ஆட்சி நமக்கு தேவையா? என்றார்
ஆற்காடு தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி விவசாயிகள் அதிகம் வசித்து வருகின்றனர் விவசாயிகள் நலன் பெற அதிமுக ஆட்சியில் குடிமரத்து திட்டம் கொண்டு வந்து ஏரி குளம் குட்டை நீர் நிலைகளை உள்ளாட்சித் துறை பொதுப்பணித்துறை மூலமாக தூர்வாரி மழைக்காலங்களில் மழை நீர் தேக்கி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தினோம்
அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்று மந்திரியாகின்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் திமுகவிற்கு ஏஜெண்டாக செயல்பட்டு மாவட்டங்கள் தோறும் சென்று ஜல்லி கிரஷர் பாறையை வெட்டி எடுக்கும் தொழிலாளர்களை அழைத்து நீங்கள் அதிக மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் ஒரு டன்னிர்க்கு 100 ரூபாய் மேலிடத்திற்கு தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு வருகிறார் இப்படி ஒரு நாளைக்கு பாலக்கோடு ரூபாய் திமுக மேல் இடத்திற்கு போய் சேருகிறது ஏழை எளிய விவசாயிகளின் பிள்ளைகளும் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு அதிமுக ஆட்சியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைப் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்
பத்து ரூபாய் அமைச்சர் உங்களுக்கு தெரியும் ஒரு நாளைக்கு தமிழகத்தில் ஒன்றரை கோடி மது பாட்டில்கள் விற்கப்படுகிறது ஒரு பாட்டில் மீது பத்து ரூபாய் கமிஷன் என்றால் ஒரு வருஷத்துல 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் இ ஐ டி ரைடு வந்ததனால் தான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தார் என்று சொல்கிறார்கள் இந்த இந்தக் குற்றச்சாட்டு திமுகவின் இயலாமையை, திறமையின்மையை காட்டுகிறது
திமுகவும் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருக்கிறது கொள்கை வேறு கூட்டணி வேறு எங்களுக்கு கொள்கை இருக்கிறது திமுகவுக்கு கொள்கை இல்லை என்று குற்றம் சாட்டினார் மேல்விஷாரம் பகுதியில் இஸ்லாமியர்கள் குடியிருந்த பகுதியிலுள்ள வீடுகளை இடித்து அங்குள்ள மக்களை வெளியேற்றி இருக்கிறார்கள் மாற்று இடம் தராமலேயே இந்த வேலையை செய்து இருக்கிறார்கள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்து வீடுகள் கட்டித் தரப்படும் என்றார் அதேபோல் தாழ்த்தப்பட்ட,ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகளை மாற்றி காங்கிரட் வீட்டு கட்டித்தரப்படும் அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்ட அம்மா மினி கிளினிக்
மருத்துவ முறையை திமுக ஆட்சியில் தடை செய்துள்ளனர் அதிமுக ஆட்சி அமைந்த உடன் 4000 மினி கிளினிக் அமைத்து தரப்படும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று கோஷம் எழுப்பி உரையை முடித்தார்
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக செயலாளர்கள் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்