ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் விளையாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் 11 ஆவது விளையாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் சாந்தி பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ் அவர்கள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி யோகா, ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு  பரிசுகளை வழங்கினார்கள். மேலும் இதில்  ஸ்ரீதரம் கல்வி குழும நிர்வாகிகள் பப்ளாசா, ஜின்ராஜ், நவீன்குமார், நிர்வாக இயக்குநர் அனுராக் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் முக்கிய அம்சமாக சதுரங்கம் மற்றும் பிக்கில் பால் ஆகிய விளையாட்டுகளில் சர்வதேச அளவில் போட்டியிட்டு பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் பெற்ற மாணவி சோபிதா மற்றும் மாணவன் ராகுல் கிருஷ்ணன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மரியாதை செய்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
Previous Post Next Post