ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் காந்தி மிஷன் வித்யாலயா நிதி உதவி நடுநிலைப்பள்ளி வாலாஜா தீனபந்து ஆசிரமத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது
இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது
தமிழ்நாடு அரசு தமிழ்செம்மல் விருதாரரும், திருக்குறள் திருப்பணிகள் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினருமான பெ.தமிழ்ச்செல்வி குமரேசன் அனைவரையும் வரவேற்றார்
மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு பிரேமலதா, நோக்க உரையாற்றினார்
மாவட்ட கல்வி அலுவலர் கிளாடி சுகுணா, மாவட்ட திருக்குறள் கண்காணிப்பு குழு உறுப்பினர் இனியவன் (எ) சங்கரன், தீனபந்து ஆசிரமம் ஆட்சி குழு உறுப்பினர்
கே.ஜெயபாரதி, ஜே சி ஐ சென்டர் செயலாளர் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் டி கே.குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்வில் வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரினிதில்லை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பொறுப்பு ஜெயஜோதி தலைமை உரையாற்றினார்
தேசிய கீதத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது
காந்தி மிஷன் வித்யாலயா நிதி உதவி நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் என். சசிகலா
நன்றி கூறினார்