போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி - மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்

போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி - மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்களும், எத்தியோபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வீர்ர்கள் என 2200க்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். 5கி.மீ, 10கி.மீ., 21கி.மீ. தூரத்திறக்கு நடைபெற்ற இப்போட்டில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்ட. 21கி.மீ. தூரத்தை முதலிடம் பிடித்த ஆண் வீரருக்கும், முதலில் வந்த பெண் வீரருக்கும் 1கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்தார்.
Previous Post Next Post