அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரியில் தனி நபர்கள் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவதாக கூறி குற்றம் சாட்டி கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வைத்துள்ளனர்.

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு வருவாய் துறைக்கு சொந்தமான சங்கிலி கரடு கல்குவாரி அமைந்துள்ளது.




பல வருடங்களாக முன்பு தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த கல்குவாரியில் ஏலம் உரிமை நிறைவடைந்ததால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது.அதனைத் தொடர்ந்து இங்கு கல் உடைக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்தனர்.




தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மூலம் கல்குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் அடிப்படையில்  அனுமதிச்சீட்டினை வழங்கி கல் உடைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று கூடிய கல்லுடைக்கும் தொழிலாளர்கள் கல் உடைப்பதற்கு ஏல அனுமதி சீட்டு வாங்கிய குழுவினர்கள் இதில் 

குரு இளங்கே முன்னல் திமுக பிரமுகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்லத் துரை மேலும் கெளரி உள்ளிட்ட

சிலர் மட்டும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு பல வருடங்களாக கல் உடைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களை கல்குவாரிக்குள் அனுமதிக்காமல் தாங்கள் மட்டும்தான் கல் உடைப்போம் ஏற்கனவே கல் குவாரி ஏலம் உரிமம் பெறுவதற்கு நிறைய கடன் தொகைகளை வாங்கி  செலவு செய்தோம் மேலும் தாங்கள் உடைத்து தற்பொழுது விற்பனை செய்து வரும் கல்லின் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தக் கடன் தொகையை அடைப்பதற்கே சரியாக போய்விடுகின்றது என்றும் மேலும் தொழிலாளர்கள் யாரும் குவாரிக்குள் வந்து கல் உடைக்க வேண்டாம் நாங்களே கற்களை உடைத்து விற்பனை செய்து மாதந்தோறும் ஏதோ ஒரு தொகையை  உங்களுக்கு தருகிறோம் எனக் கூறி தொழிலாளர்களை கல்குவாரிக்குள் வரவிடாமல் தடுப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் மேலும் கல்குவாரி உரிமம் பெரும் போது அனைத்து தொழிலாளர்களின் 

ஒத்துழைப்பு பெற்று அவர்களின் மூலமாகத்தான் சங்கத்தை உருவாக்கி மகளிர் குழு என பதிவு செய்யப்பட்டதாகவும் தற்பொழுது தாங்களை ஏமாற்றிவிட்டு நாங்கள் மட்டும்தான் என ஒரு சில தனி நபர்கள் துரோகம் செய்வதாக வருத்தம் தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்ததாக தகவல் கூறினார்கள்.....




Previous Post Next Post