நகராட்சிகளில் நியமன உறுப்பினர்கள் தேர்வுக்கு
திண்டிவனம், விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப் படவுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நியமன உறுப்பினர்கள் தேர்வுக்காக மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் 13,988 நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 712 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப் படவுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம்
மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தை சேர்ந்த கிடங்கல்-2 வளர்மதி சிவானந்தம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டி திண்டிவனம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை திண்டிவனம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி பெற்றுக்கொண்டார். இதில் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார மாற்றத்திறனாளிகள் விழுப்புரம் மாவட்ட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.