நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜா வீதியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பிறந்த நாள் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக மலர்மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.

  


விழாவினை விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்.பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையான வாழ்க்கையும் நேர்மையான அரசியலையும் அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாற்றை சுமித்ரா  மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.மேலும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் மாறுவேட போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகள் அருகாமையில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத பெரியவர்களுக்கு கையொப்பம் பயிற்சி அளிப்பதாக உறுதிமொழி அளித்தார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடு சௌடேஸ்வரி மேலும் விழாவில் ஜமுனா, பாரி,மகாலட்சுமி, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Previous Post Next Post