அகரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம்


கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் அகரம் கிராமத்தில் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட  தலைவர் கவியரசு அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராணா, மாவட்ட துணைத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, தருமன், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், மண்டல பொதுச் செயலாளர் அகிலன், ஒன்றிய செயலாளர் சகாதேவன், மண்டல பொதுச் செயலாளர் ஆனந்தன், துணை செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல் யுத்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர் இதில் முன்னாள் மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாணிக்கவாசகம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, தியாகு ஆசிரியர், ஜெயகாந்தன், லோகநாதன், பரமேஸ்வரன், பெரியண்ணன்,  அனைத்து ஊராட்சி சக்திகேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட   காவிய சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Previous Post Next Post