இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த பழங்குடியின பொதுமக்கள் சுரேஷ் என்பவரின் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது மேல்பாக்கம் கிராமத்தில் பழங்குடியின மக்களாகிய நாங்கள் சுமார் 120 வருடங்களுக்கு மேலாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் தற்போது நாங்கள் 117/ 2 சர்வே எண் கொண்ட பகுதியில் குடிநீர், மின்சாரம் ,சாலை வசதியோடு வாழ்ந்து வருகிறோம்
இந்த நிலையில் நாங்கள் குடியிருந்து வரும் இடத்தை அரசு அதிகாரிகள் காலி செய்ய சொல்கிறார்கள் மேலும் மாற்று இடம் தருவதாகவும் கூறினர் அரசு அதிகாரிகளால் தற்போது வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் எங்களுக்கு சூழ்நிலைக்கேற்றவாறு இல்லை பாதுகாப்பும் இல்லை எனவே அந்த இடத்திற்கு நாங்கள் போக மாட்டோம் என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லி நிராகரித்து விட்டோம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் 1,1/2 சென்ட் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது இது போதுமான இடமாக இல்லை மேலும் 29 நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது மீதி உள்ள நபர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்
மேலும் அரசு அதிகாரிகளிடம் மாற்று இடம் கேட்டும் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் நிர்ணயத்தை இடத்திலேயே எங்களை அழைக்காமல் தகவலும் சொல்லாமல் வீடு கட்டுமான பணிக்கு பூமி பூஜை போட்டு வேலையை தொடங்கியுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினோம் அதன்பிறகு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தோம் இந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்தனர் தற்போது கட்டி வரும் வீடு கட்டுமான பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தற்போது அரசு அதிகாரிகள் நாங்கள் குடியிருப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் பாதுகாப்பானதாக இல்லை இந்த இடத்தையும் தவிர்த்து எங்கள் கிராமத்திற்குட்பட்ட 149/9பி சர்வே எண் கொண்ட பகுதியில் போதுமான இடம் உள்ளது அந்த இடத்தில் எங்களின் 40 குடும்பத்திற்கும் மூன்று சென்ட் இடம் தந்து வீடு கட்டித்தர உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.