அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆசிரியர்.திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முனைவர்.திருப்பதி அவர்களுக்கு விருது காஞ்சி முத்தமிழ் மையத்தின் நிறுவனர் முனைவர் சூ. லாரன்ஸ் அவர்களின் தலைமையில் மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் "அப்துல் கலாம் விருது" வழங்கும் விழா 2025  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில்  உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த சமூக சேவகர், கல்வியாளர் மு. திருப்பதி அவருக்கு  சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது சமூக பணி, கல்வி பணியில் சிறந்து விளங்கிய சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக  டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பேரன் டாக்டர். ஏ.பி.ஜே. ஷேக் சலீம் நிறுவனர், டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் கலந்துகொண்டு சிறப்பித்தார் நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் விசுவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
Previous Post Next Post