தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி
ச.தீனன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்
அதனைத் தொடர்ந்து காஞ்சி ச.தீனன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வந்த அரசு மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சக்கரமல்லூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது நாங்கள் கேள்விப்பட்ட வரையில் பொதுப்பணித்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் சி டி ஓ அனுமதிக்கு காத்திருப்பதாகவும் தெரிய வருகிறது என்றார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி கிஷர்களில்
கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் பணம் பெற்றுக் கொண்டு லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி, எம் சாண்ட் ஏற்றி திணிக்கின்றனர் இப்படி லாரிகளில் ஏற்றப்படும் ஜல்லி, எம்செண்டுகளுக்கு மூன்றில் ஒரு பங்கிற்க்கு மட்டுமே ஆன்லைன் ரசித்து தருகின்றனர்
இப்படி இருக்க தணிகையில் ஈடுபடும் அதிகாரிகள் டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர் இதனால் எங்கள் லாரி தொழில் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது மாறாக கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்யது அவர்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்
மேலும் அவர் பேசுகையில் தற்போது மாவட்ட ஆட்சியர் எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் தொடர்ந்து காலதாமதமாகும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் அதற்கும் செவி சாய்க்கவில்லை என்றால் 100 மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோமென கூறினார்.