தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்பு சங்கத்தின் சார்பாக தலைவர் நிறுவனர் ரமணா நகர் சி.மணி தலைமையில் (27.07.2025) அன்று காலை 11மணியளவில் சென்னை பெரம்பூர் ரமணா நகரில் இந்திய முன்னாள் ஜனாதிபதியும் ஏழை-எளிய மக்களுக்காக வாழ்ந்து மறைந்த டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அவருடைய திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைப்பின் ஆலோசகர், மூத்த பத்திரிக்கையாளரும், மார்ஸ் ஏ/சி சி.ஐ.டி.யூ இணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் நேஷனல் பீப்பிள்ஸ், பார்ட்டி தமிழ்நாடு மற்றும் மனித உரிமைகள் நல சங்கம் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் சேவை செம்மல், சமூக சேவகர் லயன் டாக்டர் டி.கோபிநாத் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஜமால் அவருடைய திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். உடன் ஜெயராஜ், சுரேஷ், தேஜாஸ்ரீ, லீலாவதி, எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மறைந்த டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அவருடைய திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர் களம் மாத இதழ்
0