கிருஷ்ணகிரி, ஜூலை.26-
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த களர்பதி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்
துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, எரிசக்தி துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நடைபெற்றது. முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன், எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் குண.வசந்தரசு, நரசிம்மன் ,தாசில்தார் சத்யா, பிடிஓ சாவித்திரி, செல்லக்கண்ணால், ஆகியோர் கலந்து கொண்டு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், செயற்குழு உறுப்பினர் செந்தில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இலயோலா ராஜசேகர், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.