விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.இங்கு பள்ளி ஆரம்ப காலத்தில் 60 மாணவர்கள் பயின்றுள்ளனர்.தற்போது 288 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் திண்டிவனம் கே.டி.ஆர் நகரைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மனைவி பத்மாவதி(56) என்பவர் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இவர் இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் இவரை கீழ் பூதேரி என்னும் கிராமத்திற்கு விருப்ப பணி மாறுதல் பெற்று செல்ல இருந்தார்.இந்நிலையில் பள்ளி முடிந்து வெளியில் செல்வதற்கு முன்பாக அவரை பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கோஷமிட்டு மாணவர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பெற்றோர்கள் பள்ளியை மூடி பூட்டு போட்டு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தலைமை ஆசிரியர் பத்மாவதியிடம் இந்த பள்ளியை விட்டுச் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி புண்ணியகோட்டி பள்ளிக்கு நேரில் வந்து மாணவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.மேலும் தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவர்களின் நிலை குறித்து எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் பத்மாவதி தனது கணவர் கேசவனிடம் போனில் தொடர்புக்கு கொண்டு நடந்ததை கூறினார். இதனைத் தொடர்ந்து அவரை அறிவுறுத்தலின்படி வட சிறுவலூர் பள்ளியிலேயே பணியை தொடர தலைமையாசிரியர் மனம் மாறினார் இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பேசிய பத்மாவதி ஆனந்தக் கண்ணீருடன் இந்தப் பள்ளியிலேயே நான் தொடர்கிறேன் என்று கூறியதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
பாசப் போராட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வட சிறுவலூர் ஸ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வேறு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று செல்லக்கூடாது என்று மாணவ மாணவிகள் பள்ளி முடிந்த பின்பும் வீட்டுக்குப் போகாமல் பாச போராட்டம்: வட்டார கல்வி அலுவலர் சமாதான முயற்சி
தமிழர் களம் மாத இதழ்
0