திருடாதே என்றாள்- பணித்தளப் பணி பறிக்கப்படும் என்கிறார்கள் கீராம்பாடி ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் குமுறல்

ஆற்காடு ஜூலை 17 ;

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம்  கீராம்பாடி ஊராட்சியில்  மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்  வேலை நடைபெற்று வருகிறது  இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 90க்கும் மேற்பட்டோர் தினமும் வேலை செய்து  பயன் பெற்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக     கடப்பந்தங்கள் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏரி வேலை செய்து கொண்டிருந்தபோது  வேண்டா,மீரா, கோகிலா ஆகிய மூன்று நபர்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு ஏரிக்கு அருகாமையில் உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து  மாங்காய் பறித்து  மூட்டை கட்டிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது

                            

அப்பொழுது மாந்தோப்பு காவல்காரர் அவர்களை கண்டுபிடித்து  திருடிச் சென்ற மாங்காமூட்டையுடன் வீடியோ எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது  இந்த சம்பவம் குறித்து   ஏரி வேலை பணித்தள பொறுப்பாளராக இருந்த ஷாலினியிடம்   புகார் தெரிவித்துள்ளனர் ஷாலினி இந்த சம்பவத்தைக் குறித்து ஊராட்சி மன்றம் தலைவர் தேவராஜ்க்கு தகவல் கொடுத்துள்ளார்  தலைவர் தேவராஜ் வேண்டா,  மீரா கோகிலாவுக்கு  இது போன்ற தவறுகள் செய்ய வேண்டாம்  உங்களால் மற்றவர்களுக்கும் கெட்ட பேரு உண்டாகிறது   மாந்தோப்புக்காரர் கோபமாக இருக்கிறார் 2 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் அதன் பிறகு வந்து வேலை செய்யுங்கள் என்று அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது



    இதனை தவறாக புரிந்து கொண்ட மூவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உதவியுடன்   தங்களின் ஏரி வேலை அட்டையை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் இனிமேல் ஏறி வேலைக்கு வரக்கூடாது என்று மிரட்டியதாகவும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்   இந்த சம்பவம் குறித்து பணித்தள பொறுப்பாளர் ஷாலினியிடம் பேசினோம் 80துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தபோது மூவரும்  மட்டும் தனியாக சென்று மாங்கா திருடி வந்தது எல்லாருக்கும் கெட்ட பேரை உண்டாக்குகிறார்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று சொன்னதற்கு ஸ்ரீதர் என்பவரின் உதவியுடன் உங்கள் எல்லாருக்கும்  100 நாள் வேலை இல்லாமல் செய்து விடுவேன் உன்னை பணித்தள பொறுப்பிலிருந்து எடுத்து விடுவேன் என்று தனது இஷ்டப்படி பேசி மிரட்டுகின்றனர்   ஸ்ரீதர் ஆதரவில் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்     பாதிக்கப்பட்ட மீராவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம் நாங்கள் மாந்தோப்புக்கு மாங்கா திருடச் செல்லவில்லை காலைக்கடன் முடித்துவிட்டு  மாந்தோப்பில் உள்ள  தண்ணீர் தொட்டியில் முகம் கழுவிக் கொண்டு திரும்பி வரும்போது கீழே விழுந்திருந்த மாங்காயை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே  வந்தோம் அப்பொழுது

 அங்கிருந்த மாந்தோப்பு காவல்காரர் எங்களை அதட்டி மாங்காய் எடுக்கக் கூடாது என எச்சரித்தார் நாங்கள் அமைதியாக வந்து விட்டோம் என்றார்

    அதனைத் தொடர்ந்து மாந்தோப்பிலுள்ள கோவிந்தசாமியிடம் விசாரித்தோம் அவர் பேசியபோது  மாந்தோப்பை குத்தகைக்கு ஆஷீர் பாய் என்பவர் எடுத்திருக்கிறார் நான் காவல்காரனாக இருக்கிறேன் ஏரி வேலை செய்ய வருகிறவர்கள் அடிக்கடி தோட்டத்தில் இறங்கி விடுகிறார்கள் அதுல வேண்டாம்,மீரா, கோக்கில அடிக்கடி தோட்டத்துக்குள் வந்து  செல்கின்றனர் எல்லாரையும் விட வேண்டாம் தான் அதிகமா மாந்தோப்புக்கு வந்திருக்கிறார் அவர்களை படம் பிடித்து வைத்திருக்கிறோம் இந்த சம்பவம் குறித்து ஏரி வேலை பணித்தள பொறுப்பாளரிடம் சொன்னோம்  என்றார்   ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜியிடம் விசாரித்தோம் அவர் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில்   வேண்டுமென்று அவதூறுகளை  பரப்பிவருகிறார்கள்  நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை எல்லாருக்கும் என்னால் முடிந்த நன்மையை செய்து வருகிறேன் என்றார்    இரு தரப்பினரும் சந்தித்து பேசினாலே பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும் என்பது  சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது


       ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மற்றும் 
           உதவி ஆசிரியர்  M. சாமுவேல்

Previous Post Next Post