திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திண்டிவனம்,ஜூலை.21

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி  உடனுறை அன்பகநாயக ஈஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை முன்னிட்டு நேற்று காலை பால் காவடி, செடல், பூந்தேர் மற்றும் வேல் பூஜை  ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான மிளகாய் பொடி அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு 25பேர் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல்,மழுவடி சேவை, அடியார்களுக்கு 108 பேரும் வேலும் செடலும் அணிவித்தலும் மற்றும் பழங்கள் அணிவித்தலும்,செடல் ராட்டினமும் நடைபெற்றது. தொடர்ந்து தீமிதித்து ரதமும், காவடிகளுக்கும் மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



 



Previous Post Next Post