சபரிமலைக்கு திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயா வழங்கிய கஜராஜா என்றழைக்கப்படும் "மணிகண்டன்" என்ற கொம்பன் யானை, கோட்டயம் ஓமல்லூர் ரக்தகாந்த சுவாமி கோயில் வளாகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.!
அதற்கு வயது 56 கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயா, பீகாரில் உள்ள புகழ்பெற்ற சோன்பூர் கண்காட்சியில் இருந்து யானை ஒன்றை வாங்கி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அர்ப்பணித்தார்.
கஜரத்னம், கஜராஜா என்றழைக்கப்படும் அந்த யானையை நானு எழுத்தச்சன் குழு யானையை கேரளாவிற்கு கொண்டு வந்து ஐயப்பன் கோயிலில் சேர்த்தது.
கஜராஜா யானையை பெற்றுக்கொண்ட சபரிமலை தந்திரி அதற்கு "மணிகண்டன்"என பெயர் சூட்டினார்.திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அந்த யானையை தங்கள் சொந்தமாக்கி கொண்டது.
மணிகண்டன் யானை, பல ஆண்டுகளாக சபரிமலை சன்னிதானத்தில் புனிதமான திடம்புவையும் உற்சவ மூர்த்தியையும் சுமந்து பல ஆண்டுகள் சேவை செய்தது.சபரிமலையில் யானையை பராமரித்து வளர்க்க வசதி இல்லை என்பதையறிந்த சாஸ்திரி தாமோதன் தலைமையிலான குழுவினர் தேவஸ்வம்போர்டுக்கு சென்று கோட்டயம் மாவட்டம் ஓமல்லூர் ரக்தகாந்த சுவாமி கோவிலுக்காக அதை வாங்கினர்.பல ஆண்டுகளுக்குப் பின், தேவஸ்வம் போர்டு, மணிகண்டன் யானையை வைக்கம் மகாதேவர் கோயில் ஒப்படைத்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓமல்லூர் பக்தர்கள் மீண்டும் மணிகண்டன் யானையை ஓமல்லூர் ரக்தகாந்த சுவாமி கோயிலுக்கே மீண்டும் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாதமாக மணிகண்டன் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தேவஸ்வம் போர்டு சார்பில் தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் நிபுணர் குழு சிசிச்சை அளித்து வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக யானையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. செவ்வாய்க்கிழமை மதியம் கிரேன் மூலம் யானையைத் தூக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்கவில்லை.
நிறைவாக சிசிச்சை பலனின்றி மணிகண்டன் கொம்பன் யானை உயிரிழந்தது.
பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் மணிகண்டன் "யானை" யின் உடலை வனத்துறையினர் கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்தனர்......