திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயரளவிற்கு நடைபெற்ற பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்ட முகாம்.
பொதுமக்கள் கடும் அவதி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்ட முகாம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. பெயரளவிற்கு நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் முறையான தகவல் தெரியபட்டாதால் பிரதம மந்திரியின் பெருந்திட்டம் முகமில் பொதுமக்கள் அதிகளவில் வராததால் அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் கலா, அவசர அவசரமாக வரவழைத்து பொதுமக்களிடமிருந்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் கலா மனுக்களை பெற்றார். முகாம் நடைபெறும் நாள், மற்றும் நேரம், பழங்குடியின மக்களுக்கு தெரியப்படுத்தாததால் காலை முதல் ஒரு சில பொதுமக்கள் மட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க காத்துக் கிடந்தனர். இந்த முகாமில் சரியான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான பொதுமக்கள் வரவில்லை. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், யாருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை தெரிந்தவர்கள் மட்டும் வந்து மனு கொடுத்தால் போதும் என அலட்சியமாக தெரிவித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்குடி பள்ளி மாணவர்களை 20க்கும் மேற்பட்டோரை ஆதார் கார்டு எடுப்பதாக கூறி வரவழைத்து வெகு நேரமாக தண்ணீர், உணவு இன்றி அவதிக்கு உள்ளாக்கியதாகவும் இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானதாகவும் கைக்குழுந்தையுடன் வந்துள்ள தாய்மார்களுக்கு அமர்வதற்கு உரிய நாற்காலிகள் போடாததால் சிரமம் அடைந்ததாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்ட முகாம் மீண்டும் அனைவருக்கும் தெரியப்படுத்தி நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழு ந்துள்ளது.இந்த முகாம் தகவல் அறிந்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்வி மனு வழக்கறிஞர் பூபால், ரமேஷ் ஆகியோர் பழங்குடியினர் நலன் விழுப்புரம் மாவட்ட பிரதம மந்திரி ஜான்மான் திட்டத்தில் முறைகேடு நடைப்பெறுவதாகவும் பயனாளிகள் ஒப்புதல் இல்லாமல் வீடுகளை தரமற்ற முறையில் கட்டுவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்