தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று 14.01.2025 மது போதையில் பேருந்தை வழிமறித்து பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் ஆறு மாதங்களுக்கு பிறகு கடந்து சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேனி கூடுதல் டிஎஸ்பி ஜெரால்ட் தலைமையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதியை போலீசார் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், விசாரணை கைதியை தாக்கிய தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேரை ஆயுதப்படைக்கு மாற்றி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் ரமேஷ் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார் ரமேஷ் கடந்த பொங்கல் தினத்தன்று மதுபோதையில் இருந்த போது என்னை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அடித்தனர் இதனால் மயக்கம் ஏற்பட்டு படுத்து விட்டேன்.பின்னர் ஷூ காலால் மற்றும் லத்தியால் போலீசார் மாறி மாறி அடித்து துன்புறுத்தினார்கள் நான் எவ்வளவு கெஞ்சியும் என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள்போலீசார் என்னை அடித்தார்கள் என்று நான் புகார் கொடுத்தால் என் குடும்பத்திற்கும், எனக்கும் என்னவாகும் என்று பயம் இருந்தது அதனால் அப்போது புகார் கொடுக்கவில்லை.போலீசார் அடித்ததில் உடலில் பல இடத்தில் காயம் ஏற்பட்டது உள் காயங்கள் அதிகம் ஏற்பட்டது மேலும் வீட்டிற்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிற்கு தெரியாமல் உடல் வலிக்கு மருந்துகளை உட்கொண்டு வந்தேன் தற்போதும் உடலில் வலிகள் இருக்கின்றது.சம்மன் தொடர்பாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை, நான் எங்கும் தலைமறைவாகவில்லை வீடியோ வெளியான நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரையில் உள்ள வழக்கறிஞர் ஹென்றி அவர்களின் பாதுகாப்பில் இருந்தேன்மதுபோதையில் பேருந்தை மறித்ததருக்காக இந்த அடி அடித்தார்கள் என்றால் போலீசார் மீது புகார் தெரிவித்தால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்ற பயத்தினால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்......
பேட்டி - ரமேஷ் (பாதிக்கப்பட்ட இளைஞர்)