தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறுப்பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோ.வி.செழியன், ஆணைய தலைவர் ஜோ அருண், துணை தலைவர் இறையன்பன் குத்துஸ் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.