T6- பீர்க்கங்கரனை காவல் நிலையம் சார்பில் சென்னை, தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை கல்லூரி மாணவர்களும், ஆசிரியர் பெருமக்களும் எடுத்துக் கொண்டனர்

 T6- பீர்க்கங்கரனை காவல் நிலையம் சார்பில் சென்னை, தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை கல்லூரி மாணவர்களும், ஆசிரியர் பெருமக்களும் எடுத்துக் கொண்டனர். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்! நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதை பழக்கத்திற்கு உள்ளான் அவர்களே  மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பழக்கத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின்  மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க  அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், மேலாளர், காவல் உதவி ஆய்வாளர் M. கோவிந்தராஜ், D. ஞான தீபன், R. சம்பத்,S.  வினோத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன




Previous Post Next Post