ஆந்திராவில் இருந்து 4 குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் தலா ஒரு லட்சம் கொடுத்து அழைத்து வந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்திய இருவர் கைது. நான்கு குழந்தைகள் மீட்பு.

 ஆந்திராவில் இருந்து 4 குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் தலா ஒரு லட்சம் கொடுத்து அழைத்து வந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்திய இருவர் கைது. நான்கு குழந்தைகள் மீட்பு.









திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட எடையர் எம்பேத்தி பகுதியில்  சந்தேகத்திற்கு இடமான வகையில் குழந்தைகள் வாத்து மேய்த்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், சந்தேகம் கொண்டு அந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் அவர்கள் அனைவரும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து நடைபெற்ற போலீசார் விசாரணையில் ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரி உண்டி மண்டல் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் என்பவரது மனைவி பாண்டி பத்மா மற்றும் அவரது மகன் பாண்டி லாரன்ஸ் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் தலா ஒரு லட்சம் கொடுத்து அழைத்து வந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இது குறித்து மேலவாசல் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் ஆந்திராவை சேர்ந்த பாண்டி லாரன்ஸ் மற்றும் பாண்டி பத்மா இருவரையும் குழந்தை தொழிலாளர் சட்டப்படி கைது செய்து நான்கு குழந்தைகளையும் மீட்டனர்‌. 





ஆந்திராவை சேர்ந்த 4 குழந்தைகள் மன்னார்குடி பகுதியில் குழந்தை தொழிலாளராக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது


Previous Post Next Post