திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டிவனம், ஜூன்.29
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தில்லையாடி வள்ளியம்மை நகரில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 23 ஆம் தேதி துவங்கிய விழா நேற்று கெங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாக விளங்கும் ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீநாகதேவதைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வர்ணகலாப அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஶ்ரீலஶ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்,நகர செயலாளர் கண்ணன்,நகர மன்ற உறுப்பினர் பாஸ்கர், நகரின் முக்கியஸ்தர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பக்தர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.