விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட எம்சாண்ட் அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் அரசு நிர்ணயம் செய்ததை விட கல்குவாரிகளை ஆழமாக நோண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மண்டல இணை இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை)
எச்சரிக்கை
வருகின்ற 1/8/25 முதல் லாரிகள் அனைத்திற்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மாவட்டம் கிரஷர் எம்சன்ட் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை மண்டல இணை இயக்குனர் ஆறுமுக நாயனார் கூறுகையில் தமிழக அரசின் புவியியல் துறை மற்றும் சுரங்கத் துறை வெளிப்படத் தன்மையுடன் செயல்படும் நோக்கத்தில் ஆன்லைன் மூலமாக அலுவலக நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக செயல்பட்டு வருகிறது குவாரிகள் இருந்து நடை சீட்டுகள் கிரஷரில் இருந்து பாஸ் விண்ணப்பிக்கும் போது கூட ஆன்லைன் மூலமாக வாங்கப்படுகிறது அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை அனைத்தும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்படுகிறது இதில் அடுத்த கட்டமாக ஒன்று 1.8. 2025 முதல் மாநில அரசு எல்லா (லாரி) வாகனங்களும் ஜி பி எஸ் பொருத்தப்பட சொல்லி உள்ளது ஜிபிஎஸ் இருந்தால் மட்டுமே கனிமங்கள் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்டிப்பாக ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் எனவும் கடந்த இரண்டு மூன்று தினங்களாக செக்யூரிட்டி ஏஜென்சி என்ற மூலமாக குவாரியில் உட்கார்ந்து அவர்களிடம் பணம் வசலில் பொய்யான முறையில் ஈடுபட்டு வருகின்றனர் அது சம்பந்தமாக விழுப்புரம் குவாரி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அது போல யார் வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார் இதுபோல தொந்தரவு ஏற்படுத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சொல்ல வேண்டும் சம்பந்தமாக நபர்களை காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குவாரிகளின் அதிக அளவில் பள்ளங்கள் நோண்டி கனிமங்கள் எடுக்கப்படுவதாக கேட்ட கேள்விக்கு அதுபோல எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார் நாங்கள் ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வருகிறோம் அரசு அனுமதி அளித்ததை விட அதிகமா எடுத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதேபோல அரசு நிர்ணயத்தை விட அதிக அளவில் பள்ளங்கள் நோண்டினால் விபத்து ஏற்படுகிறது உயிரிழப்பு ஏற்படுகிறது என கேட்ட கேள்விக்கு அதுபோல் இருந்தால் எந்த குவாரி எனத் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். எம்சன்ட் போன்ற மணலுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலை விதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் .லாரியில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டால் அரசு அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் எடுத்துச் செல்ல முடியும் அதற்கு மேலாக எடுத்துச் சென்றால் ஜிபிஎஸ் மூலமாக தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் அதற்காகத்தான் நாங்கள் தற்போது ஜிஎபிஎஸ் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது தமிழக அரசு எம்சாண்ட் விலையை குறைத்துள்ளது ஏற்கனவே ஒரு லோடு 6000 இருந்தது தற்போது 5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.