சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
திண்டிவனம். ஜூன்.29
திண்டிவனத்தில் ரயில்வே பாதுகாப்பு படை திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து சர்வேத போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை
இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுனில் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர் மற்றும் சட்ட ஆலோசகர் சீனு பெருமாள், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி,ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் தேசி,நிலைய மேலாளர் ராம்கிஸ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி அனைவரையும் வரவேற்றார்.இதில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் ஜோசப் கிருபாகரன்,சுரேசன்,அதேகொம் பெண்கள் ஆதாரமைய ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலம் திண்டிவனம் சென்னை சாலையில் இருந்து புறப்பட்டு காவேரிப்பாக்கம் வழியாக சென்று திண்டிவனம் இரயில்வே நிலையத்தில் சென்றடைந்து.அப்போது போதை ஒழிப்பு கஞ்சா ஒழிப்பு போதைப் பொருட்களை தடுப்புகள் பற்றி கல்லூரி மாணவிகள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டவாறு சென்று ரயில்வே நிலையத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமாக ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் அதேகொம் பெண்கள் கண்ணியமைய உறுப்பினர் சித்ரா நன்றி கூறினார்.