தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
\
கலவை ஜூன் 29 :-
ராணிப்பேட்டை மாவட்டம்
கலவை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இவ்வாற்பாடத்தின் போது
டாக்டர் கிருஷ்ணசாமி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், வன்னி அரசு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், மார்க்கஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்
சிவராமன் பேசுகையில் பனை,தென்னை, ஈச்சமரம் போன்ற மரங்களில் எடுக்கும் கள்ளு விஷம் அல்ல
உணவு, சாராய தொழிலுமல்ல, குலத் தொழிலுமல்ல, விவசாய தொழில் எங்களின் வாழ்வாதாரம், இதனை மூன்று வேலையும் எடுத்துக் கொள்ளலாம் எந்த உணவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் அளவோடு தான் எடுத்துக்கொள்ள வேண்டும் கள்ளு எங்கள் உணவு, கள்ளு எங்கள் உரிமை இதனை உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்
பொறந்த குழந்தைக்கு கூட தரலாம்
மரங்களில் கள்ளு இறக்க கூடாது என்றால் தமிழக முழுவதும் ஸ்டாலின் அரசு மது கடைகளை திறந்து வைத்திருக்கிறது அது என்ன ஊட்டச்சத்து உணவகமா? எத்தனையோ பெண்கள் மதுக்கடையால் கணவனை,வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்களே? இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறதே இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல முடியுமா? கள்ளு கடை திறக்க கூடாது விஷம் என்றெல்லாம் சொல்லுகிற தலைவர்கள் டாஸ்மார்க்கை மூட வேண்டும் என்று சொல்ல வேண்டியது தானே
திமுகவிடம் பெட்டிவை வாங்கிக் கொண்டு கைக்கூலியாக செயல்பட்டு விவசாய தொழிலுக்கு விரோதமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை பேசினார்.
தலைமை செய்தியாளர்மற்றும் உதவி
ஆசிரியர் ராணிப்பேட்டை M.சாமுவேல்