கோடை குருவை அழிவுக்கு இழப்பீடு வழங்கவில்லை,குருவைக்க்கு தண்ணீர் பெற்று தரவில்லை குருவை தொகுப்பு திட்டம் ஏமாற்று நாடகம் பி.ஆர்.பாண்டியன் கண்டனம்



கோடை குருவை அழிவுக்கு இழப்பீடு வழங்கவில்லை,
குருவைக்க்கு தண்ணீர் பெற்று தரவில்லை குருவை தொகுப்பு திட்டம் ஏமாற்று நாடகம்  பி.ஆர்.பாண்டியன் கண்டனம் 
காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை குருவை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் மே ஜூன் மாதங்களில்  பெய்த பேரழிவு பெருமழையாள் ஒட்டுமொத்தமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்து அழுகிவிட்டது .

மாற்று சாகுபடி செய்ய அரசு வலியுறுத்தியதின் அடிப்படையில் பருத்தி எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் மூழ்கி அழிந்துள்ளது. நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். 

குருவைக்கு காப்பீடு திட்டத்தை கைவிட்டதால் திமுக அரசு விவசாயிகள் மகசூல் இழப்பிற்கான இழப்பீடு பெற முடியாமல் பாதித்துள்ளனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி உரிய இழப்பீடுகள் வழங்குவதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்படாமல் பாதிப்பிலிருந்து திசை திருப்பும் நோக்கோடு விவசாயிகளை ஏமாற்றும் நயவஞ்சக நடவடிக்கையாக குருவை தொகுப்பு திட்டம் என்கிற பெயரில் நாடகமாடுகிறது. 

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது வெளிப்படுகிறது.. எனவே இந்த தொகுப்பு திட்டம் ஊழல் முறைகேடுகள் செய்வதற்கு வழிவகுமே தவிர, பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு தீர்வாக அமையாது. 

இத்திட்டம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய பாதிப்புகளை மூடி மறைப்பதற்கும், அவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் தப்பிப்பதற்கும் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

டிராக்டர் மற்றும் நடவு  அறுவடை இயந்திரங்கள் தொடர்ந்து  வழங்கி வரும் நிலையில், அத்திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து குருவை தொகுப்பு திட்டம் என்கிற பெயரில் ஒரு ஏமாற்று நாடகத்தை அடங்கேற்றி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்மையாக கண்டிக்கிறோம். 

பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி பாதுகாக்க முன்வர வேண்டும் என வழியுறுத்ததுகிறோம்.

மேலும் கர்நாடக அணைகல் நிரம்பி உள்ள நிலையில் அவசரகால சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தண்ணீரைப் பெற்று ஜூன் இறுதிக்குள்ளாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுகிய கால குருவை பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்..

மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் 
பி ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்..
இவன் 
.
Previous Post Next Post