மணலி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து திமுக அதிமுக உள்ளிட்ட 7 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா

மணலி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து திமுக அதிமுக உள்ளிட்ட 7 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணலி ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சுமித்ரா ரவி உள்ளார். இந்த மணலி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அரசின் திட்டங்கள் மணலி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பது வார்டுகளில் சரிவர செயல்படுத்தாத காரணத்தினாலும் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி மன்ற நிர்வாகமும் நடைபெறு பணிகளை தங்கள் தெரியப்படுத்தவில்லை எனவும் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற காரணத்தினால் திமுகவைச் சேர்ந்த 3 வார்டு உறுப்பினர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு வார்டு உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்த இரண்டு வார்டு உறுப்பினர்கள் உட்பட 7 வார்டு உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ராமேஷிடம் வழங்கினர்.
Previous Post Next Post