திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி பெரம்பலூர் கரூர் அரியலூர் ஆகிய நான்கு மாவட்ட மண்டல கூட்டம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நந்தகுமார் அவர்கள் முன்னிலையிலும் மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமையிலும் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் தோழர் திரு குமார் அவர்கள் வரவேற்புரையும் மாநில பொதுச் செயலாளர் தோழர் பி கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார். திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி தலைவர் தோழர் திரு நடராசன் அவர்களும் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் திரு சுரேஷ் (மாமன்ற உறுப்பினர்) அவர்களும்
வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் மனு கொடுக்கும் நிகழ்வினை துரிதப்படுத்த வேண்டும். 10. 7. 2024 அன்று நடத்தப்படும் போராட்டத்திற்க்கு திருச்சி மாவட்டத்தில் 5600/ தொழிலாளிகளையும் பங்கேற்க வைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர் திரு முருகன் அவர்கள் நமது சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் முருகன் அவர்கள் ஏற்புறையும் நன்றியுரை ஆற்றினார். நன்றி